Thursday, August 03, 2006

செவிக்கு நல்லஉணவு

>

எனது அன்பிற்குரிய யாழ். சுதாகர்அவர்களுக்கு

வணக்கம்...

வெள்ளியன்று ஏழிசை வேந்தன் திரு.டி.எம்சௌந்தரராஜன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு
அவரது பழைய பாடல்களை ஒலிப்பரப்பி எங்களை அசத்திவிட்டீர்கள்.

'யாழ்' பழந்தமிழ் இசைக்கருவி என்று அறிந்தேன்.சரி.

பாணம் என்றால் தமிழில் என்ன அர்த்தம்?

எனக்குத் தெரியவில்லை.

திருவிளையாடல் படத்தை வைத்துப் பார்த்தால் பாணம் என்றால் பாடல் என்று வரும் போல் தெரிகிறது.

அதில் பாணபத்திரர் என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கிறது.

அதன்படி எனது கற்பனை யாழ் இனிய இசை, பாணம் பாட்டு பத்திரர், பாணபத்திரர், இனியபாட்டுக்காரர் யாழ் சுதாகர் அவர்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுதென் காதினிலே, சரி,

ஆனால் எனக்கு யாழ்ப்பாணம் என்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது என் நெஞ்சினிலே. ஆம் அந்தநாட்டு பெயரை கேட்டாலே ஒரு மரியாதையுடன் தான் நாம் கவனிப்போம்.

தினமும் விடுதி சாப்பாடு சாப்பிடுபவர்கள் ஒருநாள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டவுடன் என்ன கூறுவார்கள்?

ஆஹா…

இன்றுதான் நல்ல சாப்பிட்டேன் திருப்தியாக ...

இத்தனை நாளாக நாக்கு செத்துக் கிடந்து என்பார்களே...

அது போல் நாங்களும் இங்கே…டப்பா பாட்டுக்களை கேட்டுக் கேட்டு காது செத்துப்போய் கிடந்தோம்.

நீங்களும் ஒரு தொகுப்பாளராக அமர்ந்த பின் தான்
செவிக்கு நல்லஉணவு,
மனதுக்கு ஒரு ஆறுதல்,

இது உண்மை.

ஏழிசை வேந்தனின் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொண்டு இப்படியொரு மேன்மிகு மரியாதை செய்த உங்களின் திருவடி தொட என் சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன்.

இப்படியெழுதுவது உங்களுக்கு சற்றுசங்கடமாகஇருக்கலாம். ஆனால், எனக்கு ஆத்மதிருப்தி ஏற்பட்டுவிட்டதே.

நிகழ்ச்சியின் ஊடே நீங்கள் அளித்த தொகுப்பின் போது புலம் பெயர்ந்த என்வாழ்க்கை பயணத்தில் பல இடிகள் வந்து விழுந்தபோதும் எனது முழுக்கட்டுப்பாட்டிலிருந்த கண்ணீர் உங்கள் (TMS) பாடல்களில் கரைபுரண்டு விட்டது என்று கூறினீர்கள்.

அது கேட்டு எனது கபாலம் சற்றே உடைவது போலிருந்தது,...

எனது கண்ணின் இமையோரம் கண்ணீர்த்துளிகள் வழிந்தது,இதயம்கனத்தது.

சிந்தையில் 1983 நினைவுக்கு வந்தது.

வாழ்க்கையில் தாங்கள் பெருமையாககருதுவது இரண்டு,

ஒன்று தமிழனாகப்பிறந்தது,

மற்றொன்று: ஏழிசைவேந்தர் காலத்தே வாழ்வதுஎன்றீர்கள்,

.தமிழனாகப் பிறந்தது என்றீர்களே..

ஆஹா….அதுதான் உறவுப்பாலம்.

ஆனால்! வாழ்க்கையில், நான் பெருமையாககருதுவது:
நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

திரு,மயில்வாகனம் அவர்கள் 5.00மணிக்கு நிகழ்ச்சியை துவக்க போகிறாரென்றால், எங்கிருந்தாலும் சைக்கிளை மிக வேகமாக ஓட்டிவந்து ஸ்டாண்டைக் கூட சரியாகப் போடாமல், 4.55க்கெல்லாம் வானொலிப்பெட்டிமுன் அமர்ந்துவிடுவோம்,

அவர் வணக்கம் என்று நிகழ்ச்சியினை தொடங்கும் அழகே தனி, அந்த ஸ்டைல் மிக அருமை எனறு கூறினீர்கள்...

ஆம்! எங்களுக்கும் அதுபோன்றே யாழ் திரு.சுதாகர் அவர்கள்.

ரவி!...
யாழ்ப்பாணக்காரரு வந்துட்டாருப்பா,
அந்த டிரான்ஸிஸ்ட்டரை கொண்டாந்து இந்த டேபிள் மேலேவைப்பா என்பார் என் சீனியர்,

டேய் பங்காளி போய் சீக்கிரமா கொண்டாயேண்டா என்பான் என் நண்பன்,

ராம்லா என்ற தோழர் தாமதமாக வருவார்...

வந்தவுடன்‘ ஆ…நம்மாளு வந்துட்டாருப்பா என்பார்.

உடனே நான் யாருப்பா அது என்பேன்!


அதாம்ப்பா நீ சொல்வியே யாழ்சுதாகரு என்பார்,

திரு.மயில்வாகனம் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பை கேட்க எங்களுக்கு கொடுப்பினை இல்லை.

ஆனால்யாழ்சுதாகர்இருக்கின்றாரே....

அன்று அவர் ,இன்றுஇவர்,

அங்குஅவர்

இங்குஇவர்.

நீங்கள் சிலசமயம் கவிதை படித்துவிட்டு ‘ஆஹா….பிரமாதம்’ என்று இடையே வசனத்தை நுழைத்து ஒலிப்பரப்புவீர்களே...

அது ஒருபுதுமை. மிகஅருமை.

இப்படிப்பட்ட அய்டியாவையெல்லாம் இதற்க்குமுன் நாங்கள் எங்கே அய்யா கேட்டு இருக்கின்றோம்?

எல்லாம் நீங்கள் வந்தபின்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

நான் நெடுநாட்களாகவே உங்களுக்கு கடிதமெழுதவேண்டுமென்று நினைப்பதுண்டு...

ஏனோ அதுமுடியாமலேவந்தது.

இப்போது அதை செய்கின்றேன். தயவுசெய்து இதை பொறுமையாக ஒரு வாசிப்பு செய்வீர்களா?

எனக்காக எனது கடிதத்திற்க்காக உங்களது நேரத்தை ஒதுக்குவதற்க்காக மிக்க நன்றி! நன்றி! நன்றி!

-வேலு ரவிச்சந்திரன், சென்னை - 99

2 comments:

சின்னக்குட்டி said...

சாதனை படைத்த உங்களுக்கு காலம் பிந்தியென்றாலும் வாழ்த்துக்கள் நண்பரே..

யாழ் சுதாகர் said...

திரு.சின்னக் குட்டி அவர்களே ...
வணக்கம்.
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

-யாழ் சுதாகர்்