Saturday, January 17, 2009

தெளிவையும் ஞானத்தையும் தரும் ...யாழ் சுதாகரின் பாடல் தெரிவு . சரோஜா சம்பத்குமார்

'லால்குடி முருகன்' கடிதத்தைப் பெரிய எழுத்தில்
தெளிவாகப் படிக்க...
அதன் மேலே ஒரு தடவை அழுத்துங்கள்.




கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.





LINKS

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்

யாழ் சுதாகரின் குரல் பதிவுகளைக் கேட்க...

உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்! -மயிலாடுதுறை ஸ்ரீநிவாஸ்

கே.எஸ்.ராஜாவுக்கு 'பயணம்...பயணம்'... பாடல்....நான் ஆடிப் போய் விட்டேன் அய்யா! -வேலு ரவிச்சந்திரன்

பழைய பாடல்களை... இன்றைய இளைஞர்களையும் விரும்ப வைத்த 'யாழ் சுதாகர்'. -கொளத்தூர் தண்டபாணி

நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

உங்கள் குரல், ரசிகர்களுக்கு தவம்! மற்றவர்களுக்கு வேதம்!

Who is this silver tonged orator?

Your comments and voice are refreshing to hear. They add lustre to the song.

May god bless you for the joy you are brining in for so many listeners.

Highly nostalgic pleasure for Tamilians in their 40s age, like me.

you are an amazing person and added to all this your kind Majestic voice and the way you speak makes the progs so much better.

அந்த நாளில் நடராசா செய்த 'பானையில் ரேடியோ' கதை
சுவாரஸ்யம்-சரோஜா சம்பத்குமார்


4 மணிநேரம் சூரியன் பண்பலையில்..இசை வெள்ளமா?

இன்று 17/ 01/ 09...
சூரியனை தட்டியபோது.......
கவிஞரின் குரலொன்று......
காலங்களை பின்னோக்கி....

கான மழையாக!
அமுத மழையாக!
பூ மழையாக!
பொழிந்தது யாழ் சுதாகரின்
இசை என்னும் வெள்ள்ம்!

வந்தது இசை வெள்ளமா?
பாடசாலையில் பாடங்களா?
ஆசிரியரின் அறிவுரைகளா?
பள்ள ிபருவத்தின் பல் சுவைகளா?
மறைந்துவிட்ட சினிமா திரை அரங்குகளா?
மங்கி விட்ட இளமையின் ராகங்களா?

4 மணிநேரம் சூரியன் பண்பலையில்
யாழ் சுதாகரின் வண்ண வண்ணமாக
வீசிய ஒலியில்
மறந்து விட்டது
துன்பங்களும், துயரங்களும்

சூரியன் என்னும் பண்பலையில்
சுடராக ஒளிரட்டும்
யாழ் சுதாகர் அந்த நாட்களோடு!!!


மலரட்டும மல்லிகை பூக்களாக
அந்த நாள் நினைவுகள்..........

- தேவிகா
ITALY

Dear Yazh,

4 mani nera thookathai keduthu...

Inniyapadalkalai poomaalaiyai thodutthu....

Malarum ninaivugalai issaiyai vaditthuk
Kodutthaa yazhpanam sudhaher avargale...

Nangal solkirom kodi nantrigale..

Thodarattum ungalathu isssi payanam


Thirumurugan / jai
velachery
vijayanagar


Monday, January 12, 2009

"தமிழுக்கு இனிமை தாருங்கள் தினம் தினம்."

'அந்த நாளும் வந்திடாதோ...' என்று அந்த நாளை மறந்திடாமல்
அற்புதங்கள் சொல்லும் அழகான அமுத குரலும்,

தத்துவம் சொல்லும் அனுபவம் நிறைந்த குரலும்,

சோக கதைசொல்லும் போது மனது தளர்ந்த குரலும்,

பக்திப்பாடல்களுக்கு பரவசமூட்டும் பண் இசைகுரலும்,

காதலின் இனிமையை கனிந்த, கனிவான குரலிலும

இளமயை ததும்பவைக்கும் இனிப்பு மின்சாரமாக,

உங்களைப் படைத்த பிரம்ம தேவன் எங்கே? எங்கே?

M. G R தனித்துவத்தை தரமாக்கி,
சிவாசி யின் சித்திரத்தை சிகரமாக்கி,
கவிக் கண்ணனின் கற்பனைகளை கலைக்கோவிலாக்கி,
T.M. S இன் கானக்குரலை பாட்டுக்கொரு தலைவனாக்கி,
K. S.RAJA வை இலங்கை வானொலிக்கு ஒரு ராசாவாக்கி,
கலை களுக்கு ஒர் கவி னாக,
மணிமகுட புகழ் மாலை சூட்டும் உங்களிடம்!

பூவின் மென்மை உங்கள் குரலில்.....

மலரின் வாசனை உங்கள் சொல்லில்....
.
மதுரத் தமிழ் உங்களிள் இலகணத்தில்......

உதிரட்டும் கவிதை கொண்ட பழைய பாடல்கள்
வீசட்டும் முத்துக்களாக!!!

துயரங்களால் புண்பட்ட தமிழ் உள்ளங்கள் மறந்துவிட்ட இனிய நினைவுகள்,தியேட்டர்கள்,விடுபட்ட கோவில் திருவிழாக்கள்,புகழ்பெற்ற இலங்கை வானொலியின் இனிய நிகழ்ச்சிகள் எல்லாம் என்றோ மறந்துவிட்டது என நினைக்கு முன்னர் மீண்டும் நினைவுகளுக்கு அழைத்துச்சென்று
ரசிக்கவைக்கும் "யாழ் சுதாகர்" அவர்களே!

பாடல் தொகுப்புகளுக்கு முத்தான கவிதை என்னும் மலர்களை, ஒவ்வொரு வீடுகளிலும்,ஒவ்வொரு உள்ளங்களிலும் யாழ் இசைக்கு ஈடான உங்கள் அழகான குரலால், உதிர்ந்துபோன அந்த நாட்களை மீண்டும் மலரவைத்து எங்களை கற்பனையில் மிதக்க வைக்கின்றீர்கள்.

சென்ற 24/ 12/ 08 அன்று நீங்கள் நடத்திய 4மணிநேர நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்தபோது என்னையே மறந்து விட்டேன்.

நானும்உங்களைப்போல் இல்ஙகை வானொலியை மிகவும் ரசித்துக்கேட்பேன். நீங்கள் சொல்லும் பழைய சம்பவங்கள், படங்களின் கட் அவுட் கதைகள்
பாடசாலையில் படித்த நினைவுகள் சங்கிலித்தொடரக அலைமோதும்.!

ஒவ்வொரு பாடல்களுக்கும் நீங்கள் சொல்லும் விமர்சனங்களும் சரி, கவிதைகளும் சரி, அது சோகப்பாடல்களனாலும், ததுவப்பாடல்களானாலும், காதல் அல்லது பக்திப்பாடல் எதுவாக இருங்தாலும் சரி பாடல்களுக்கு ஏற்றவாறு குரலை மாற்றி உங்களால் எப்படிப்பேச முடிகிறது என்று நான் பல தடவை சிந்தித்திருக்கிறேன்.

29/ 12/ 08 அன்று ராகங்களை அடிப்படையாக கொண்ட பாடல்கள் மிக மிக நன்றாக இருந்ததது. கேட்க முடியாத, கேட்ககிடைக்காத அதிசய
ராகங்களைக்கேட்டபோது மிகவும் சந்தோசமாக இருந்தது.

இலங்கை வானொலியில் பாடல்களை கேட்டபோது சும்மாதான் பாடல்களை ரசித்தேன். நீங்கள் இப்போது பாடல்களுக்கு தரும்விளக்கங்களும், கவிதைகளும் தனிப்பெருமை சேர்க்கின்றது. பாடல்களின் தனித்துவத்தை இப்போதுதான் விளங்கிக்கொள்கிறேன்.

உங்கள் நிகழ்ச்சிகளை E T R வானொலியிலும், I T R வானொலியிலும் கேட்டிருக்கிறேன். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத
தொகுப்பு தோரணங்கள்.

நீங்கள் ஒவொரு படல்கள் போடும்போது சொல்லும் ஒவ்வொரு பழைய கதைளைக்கேட்கும் போது எனக்கும் பழைய நினைவுகள்
எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

உங்களால் முடிந்தால் எப்படியும் கிழமையில் 2 நாட்கள் 3 மணிநேரம் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யுங்கள்.
உங்கள் நிகழ்ச்சிகளை கேட்கும்போது கவலைகள் எல்லாம் மறந்துபோய் விடுகின்றது.

கன மழை 5 நிமிடங்கள் தொடர்ந்து பெய்தால் பெருவெள்ளம் வருவது போல் நீங்கள் 1மணிநேரம் நிகழ்ச்சி நடத்தும்போதுகூடஅந்த 1மணிநேரமும் எங்கேயோ திருவிழாவில் இருப்பது போன்று இருக்கும். அப்படி ஒரு இசை வெள்ளத்தை
தந்துவிடுவீர்கள்.

செல்லும் இடம் தோறும் "புகழ் சேர்க்கும் சுதாகருக்கு" என்றும் என்
அன்பான வாழ்த்துகள்.

" தமிழுக்கு இனிமை தாருங்கள் தினம்! தினம்!!"


செ.கருணாகரன், [மண்டை தீவு]

HOLLAND