Friday, August 04, 2006

இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள் - 6




நீர் ஓர் தமிழ்க்கடல், குரல் களஞ்சியம்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு
அதிநுட்பம் யாவுள முன் நிற்பவை”....
-குறள்

தமிழ்நாட்டு வான்அலைகளை கற்கண்டு அலைகளாக மாற்றிக்கொண்டிருக்கும் யாழினினை குரலாக உடைய

யாழ்ப்பாணத்து (யாழ்)சுதாகர் அவர்களுக்கு....

உங்கள் அன்பு தமிழ் ரசிகன் எழுதும்மடல்.

நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி அருமையிலும்அருமை. உங்களின் நிகழ்ச்சி தொகுப்புத்தோரணம்,…புகழ வார்த்தைகளே இல்லை.

ஆங்கிலத்தைப் போல் தமிழையும் ஸ்டைலாக பேசமுடியும் என்பதை உங்கள்மூலம் தெரிந்து கொண்டேன்.

வானத்து மேகங்களை காகிதமாக்கி நீலவானத்தை மையாக கொண்டு உங்கள் தமிழ்புலமையை புகழ்ந்தால்கூட அது வற்றிப் போகும்.

நீர் ஓர் தமிழ்க்கடல்,
குரல் களஞ்சியம்,

கேட்க ஆயிரம் காதுகள்வேண்டும். தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா தொலைக்காட்சிகள், வானொலிகள் இருந்தும் உங்களின் (தமிழீழ தமிழர்கள்) பேச்சுத்திறமைக்கு ஈடாகமுடியாது.

4 ½ கோடிதமிழர்கள்வாழும்தமிழ்நாட்டில்...கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல்ஹமீத் ஆகியோருக்கு இணையாக யாரும் இல்லை என்பது வேதனைக்குரிய செய்தி.

செத்தவன் கையில் வெற்றிலை பாக்கை கொடுத்ததைப்போல் தமிழை பேசி கெடுக்கும் தமிழ் அறிவிப்பாளர்கள் மத்தியில்...நீர் ஓர்விடிவெள்ளி!

தமிழ் வானை வலம் வரும் முழுநிலா.

வாழ்கநின்புகழ்!

வளரட்டும் நின் தமிழ்தொண்டு!!

“சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் இன்மை அறிந்து -”குறள்“

இத்துடன் உனது கணக்கை முடிக்கப்போகிறேன்என்று இறைவன் என்னிடம் கூறினால்...

நான் வரம் ஒன்று அவனிடம் கேட்பேன்.

இறைவா எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை ஈழத்தில் பிறக்கவை.

அப்போதுதான் ....யாழ் சுதாகர் போன்றவர்களின் குரலைக்கேட்பதற்கும்.. .தமிழை தமிழாக பேசுவதற்கும் வாய்ப்பினைப்பெறுவேன்.”

-ஆ .செல்வராயர்,திண்டிவனம்


---- ----- -----




'யாழ் சுதாகர்' குரலில்

ஒலிப்பதிவு செய்யப்பட்ட

கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில் பெற விரும்பினால்....

ungalrasigan@yahoo.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்.....

உடன் அனுப்பி வைக்கிறோம். [ By E - Mail]

phone-9841985537

Thursday, August 03, 2006

செவிக்கு நல்லஉணவு

>

எனது அன்பிற்குரிய யாழ். சுதாகர்அவர்களுக்கு

வணக்கம்...

வெள்ளியன்று ஏழிசை வேந்தன் திரு.டி.எம்சௌந்தரராஜன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு
அவரது பழைய பாடல்களை ஒலிப்பரப்பி எங்களை அசத்திவிட்டீர்கள்.

'யாழ்' பழந்தமிழ் இசைக்கருவி என்று அறிந்தேன்.சரி.

பாணம் என்றால் தமிழில் என்ன அர்த்தம்?

எனக்குத் தெரியவில்லை.

திருவிளையாடல் படத்தை வைத்துப் பார்த்தால் பாணம் என்றால் பாடல் என்று வரும் போல் தெரிகிறது.

அதில் பாணபத்திரர் என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கிறது.

அதன்படி எனது கற்பனை யாழ் இனிய இசை, பாணம் பாட்டு பத்திரர், பாணபத்திரர், இனியபாட்டுக்காரர் யாழ் சுதாகர் அவர்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுதென் காதினிலே, சரி,

ஆனால் எனக்கு யாழ்ப்பாணம் என்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது என் நெஞ்சினிலே. ஆம் அந்தநாட்டு பெயரை கேட்டாலே ஒரு மரியாதையுடன் தான் நாம் கவனிப்போம்.

தினமும் விடுதி சாப்பாடு சாப்பிடுபவர்கள் ஒருநாள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டவுடன் என்ன கூறுவார்கள்?

ஆஹா…

இன்றுதான் நல்ல சாப்பிட்டேன் திருப்தியாக ...

இத்தனை நாளாக நாக்கு செத்துக் கிடந்து என்பார்களே...

அது போல் நாங்களும் இங்கே…டப்பா பாட்டுக்களை கேட்டுக் கேட்டு காது செத்துப்போய் கிடந்தோம்.

நீங்களும் ஒரு தொகுப்பாளராக அமர்ந்த பின் தான்
செவிக்கு நல்லஉணவு,
மனதுக்கு ஒரு ஆறுதல்,

இது உண்மை.

ஏழிசை வேந்தனின் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொண்டு இப்படியொரு மேன்மிகு மரியாதை செய்த உங்களின் திருவடி தொட என் சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன்.

இப்படியெழுதுவது உங்களுக்கு சற்றுசங்கடமாகஇருக்கலாம். ஆனால், எனக்கு ஆத்மதிருப்தி ஏற்பட்டுவிட்டதே.

நிகழ்ச்சியின் ஊடே நீங்கள் அளித்த தொகுப்பின் போது புலம் பெயர்ந்த என்வாழ்க்கை பயணத்தில் பல இடிகள் வந்து விழுந்தபோதும் எனது முழுக்கட்டுப்பாட்டிலிருந்த கண்ணீர் உங்கள் (TMS) பாடல்களில் கரைபுரண்டு விட்டது என்று கூறினீர்கள்.

அது கேட்டு எனது கபாலம் சற்றே உடைவது போலிருந்தது,...

எனது கண்ணின் இமையோரம் கண்ணீர்த்துளிகள் வழிந்தது,இதயம்கனத்தது.

சிந்தையில் 1983 நினைவுக்கு வந்தது.

வாழ்க்கையில் தாங்கள் பெருமையாககருதுவது இரண்டு,

ஒன்று தமிழனாகப்பிறந்தது,

மற்றொன்று: ஏழிசைவேந்தர் காலத்தே வாழ்வதுஎன்றீர்கள்,

.தமிழனாகப் பிறந்தது என்றீர்களே..

ஆஹா….அதுதான் உறவுப்பாலம்.

ஆனால்! வாழ்க்கையில், நான் பெருமையாககருதுவது:
நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

திரு,மயில்வாகனம் அவர்கள் 5.00மணிக்கு நிகழ்ச்சியை துவக்க போகிறாரென்றால், எங்கிருந்தாலும் சைக்கிளை மிக வேகமாக ஓட்டிவந்து ஸ்டாண்டைக் கூட சரியாகப் போடாமல், 4.55க்கெல்லாம் வானொலிப்பெட்டிமுன் அமர்ந்துவிடுவோம்,

அவர் வணக்கம் என்று நிகழ்ச்சியினை தொடங்கும் அழகே தனி, அந்த ஸ்டைல் மிக அருமை எனறு கூறினீர்கள்...

ஆம்! எங்களுக்கும் அதுபோன்றே யாழ் திரு.சுதாகர் அவர்கள்.

ரவி!...
யாழ்ப்பாணக்காரரு வந்துட்டாருப்பா,
அந்த டிரான்ஸிஸ்ட்டரை கொண்டாந்து இந்த டேபிள் மேலேவைப்பா என்பார் என் சீனியர்,

டேய் பங்காளி போய் சீக்கிரமா கொண்டாயேண்டா என்பான் என் நண்பன்,

ராம்லா என்ற தோழர் தாமதமாக வருவார்...

வந்தவுடன்‘ ஆ…நம்மாளு வந்துட்டாருப்பா என்பார்.

உடனே நான் யாருப்பா அது என்பேன்!


அதாம்ப்பா நீ சொல்வியே யாழ்சுதாகரு என்பார்,

திரு.மயில்வாகனம் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பை கேட்க எங்களுக்கு கொடுப்பினை இல்லை.

ஆனால்யாழ்சுதாகர்இருக்கின்றாரே....

அன்று அவர் ,இன்றுஇவர்,

அங்குஅவர்

இங்குஇவர்.

நீங்கள் சிலசமயம் கவிதை படித்துவிட்டு ‘ஆஹா….பிரமாதம்’ என்று இடையே வசனத்தை நுழைத்து ஒலிப்பரப்புவீர்களே...

அது ஒருபுதுமை. மிகஅருமை.

இப்படிப்பட்ட அய்டியாவையெல்லாம் இதற்க்குமுன் நாங்கள் எங்கே அய்யா கேட்டு இருக்கின்றோம்?

எல்லாம் நீங்கள் வந்தபின்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

நான் நெடுநாட்களாகவே உங்களுக்கு கடிதமெழுதவேண்டுமென்று நினைப்பதுண்டு...

ஏனோ அதுமுடியாமலேவந்தது.

இப்போது அதை செய்கின்றேன். தயவுசெய்து இதை பொறுமையாக ஒரு வாசிப்பு செய்வீர்களா?

எனக்காக எனது கடிதத்திற்க்காக உங்களது நேரத்தை ஒதுக்குவதற்க்காக மிக்க நன்றி! நன்றி! நன்றி!

-வேலு ரவிச்சந்திரன், சென்னை - 99

இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள் - 4

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

அன்பான யாழ் அவர்களே…..

தீபாவளி…. நல்வாழ்த்துக்கள்.

29-10-05 சனிக்கிழமை இரவு 3.00 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியில்… பழைய காலத்து பாடல்களும்…. பதிவான முறைகளும் அதற்கான அர்த்தங்களோடு…. எங்களை எல்லாம் மகிழ்வித்த… நீங்கள்.. [ நீ சொல்லாவிட்டால்… வேறு யார் சொல்வார்கள்… யாழ் ?….. ] அத்தனையும் அருமை…

மயில்வாகனனை நினைவு கூர்ந்தது….. அத்தனையும் மிஞ்சும் அருமை.

ஏனென்றால் உங்களது குரல்வளம் அவரைப்போலவே இருக்கும். நான் முதலில் கேட்டு ரசித்த உங்களது குரல் அவர் என்றுதான் முதலில் நினைத்தேன். .

இரவை கூட பகலாக்கி… எங்களை … சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் யாழ் அவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

-பி.ஜி.கெனி, அணைக்கரை

இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள் -3




அமுதும் தேனும் எதற்கு?

எங்கள் அண்ணன் யாழ் சுதாகர் இருக்கையிலே எனக்கு!!

அமுத கானங்களை.... தேனினும் இனிய சுவை உடைய அழகு தமிழில் காற்றலைகளின் மூலம் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான நேயர்களின் எண்ண அலைகளோடு அன்புடன் உறவாடும் அண்ணன் யாழ் சுதாகர் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

பாட்டுக்கொரு தென்றல் திரு. ஏ.எம். ராஜா அவர்களின் தொகுப்பையும், இசைமணி திரு. சீர்காழி கோவிந்தராஜனின் தொகுப்பையும் கேட்டு பரவசம் அடைந்தேன்.

இன்னும் பாராட்டுவதற்கு வார்த்தைகளைத் தேடித் தேடி கடைசியில் எனக்குத் தெரிந்த வார்த்தை இதுதான். “தங்கள் நிகழ்ச்சிகளைக் கேட்குமாறு என்னை மனிதனாகப் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

பிறவிப் பயனை நான் முழுமையாக அடைந்து விட்டேன்.

” 14-02-06 அன்று அதிகாலை 5.00 மணிக்கு ஒலிப்பரப்பான பாட்டுக்கொரு தென்றல் திரு. ஏ.எம். ராஜா, ஜிக்கி இணைந்து பாடிய “செந்தாமரையே” என்ற பாடலைக் கேட்டு என் உயிர் உருகி ....

“ராசி நல்ல ராசி” என்ற பாடலுக்கு உயிர்த்தெழுந்து...

“முத்தாரமே” என்ற பாடலைக் கேட்டு மீண்டும் உயிர் உருகி.. உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்.... மனக் கண்களில் நான் அண்ணன் யாழ் சுதாகரைக் காண்கிறேன் என்று கூறி பாடல்களை ஒலிக்கச் செய்த தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியை தங்களின் பொற் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

-லால்குடி ஆர்.திருமுருகன் , சென்னை - 42



யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க...
[TO LISTEN TAMIL OLD SONGS] இங்கே சொடுக்குங்கள்
.

YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR,
TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள் - 2

யாழ் குரல்” ...... பாடல்களை ஏங்க வைக்கும் குரல்...

உங்கள் குரல், இரசிகர்களுக்கு தவம்!

உங்கள் குரல், மற்றவர்களுக்கு வேதம்!

உங்கள் குரல், கேட்பவர்களுக்கு தெய்வீகம்!

உங்களின் சோகக்குரல், எங்களையும் சோகமாக்குகின்றது!

உங்களின் உற்சாகக்குரல், எங்களையும் உற்சாகமூட்டுகின்றது!

உங்களின் தியானக்குரல், எங்களையும் தியானத்திற்கு அழைக்கின்றது!

உங்கள் கவிதைக்குரலை, கேட்க எல்லா பாடல்களும் ஏங்குகின்றன!

உங்கள் குரலால் மட்டும் உரியவர்களுக்கு கொடுக்கும் பட்டங்கள் உயரியவை!

-பி.கணேஷ்குமார், சென்னை-5