Tuesday, August 11, 2009

You are indeed one of the greatest performers in the history of radio Tamil broadcasting.

Dear Mr. Yazh Sudhakar,


Congratulations on your grand program performed on July 24th and August midnight from 11.00 pm to 3.00 am. I am one of your fans and admirers for a long time.


So many people like me most voluntarily forego the midnight sleep and are hooked on to your commentary on each and every song you play. With your scholarly comments each song stands up having an additional beauty and exciting charm.


You are indeed one of the greatest performers in the history of radio Tamil broadcasting. At present you stand second to none in this field.

Your chaste and articulate Tamil diction and the philosophy enshrined in your commentary are really outstanding and commendable. When it comes to the all time classics of T.M.S., you ascend to the highest level and reach the zenith and climax to which level no one can ever come near you.


You shine better as a bright star whenever you have the program more than an hour. We all wish you come on the air at least two hours if not more.

The choice of your opening song, the momentum and the crescendo all through your program is quite amazing and inimitable. You not only entertain the listeners but also stir their minds and touch their hearts. In this way you are doing a wonderful and yeoman service to the Tamil community all over the world.

With the greatest appreciation and love, I wish you all success.


- Andrew P. John, M.A., B.Ed.

Tiruvottiyur,Chennai-600019


LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

Sunday, April 26, 2009

ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .. - கௌரி , டென்மார்க்

ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .....
மறக்க முடியாத அந்த நாட்களை மீண்டும்
E T R வானொலி மூலம் தமிழ் சுடராக உங்கள் குரல்
ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரம்
உங்கள் தித்திக்கும் உங்கள் செந் தமிழை
திகட்டாமல் கேட்கின்றேன்.

காவியத்தலைவன் , பொன்மனச்செம்மல்
செந்தமிழ்ச்செல்வனின் வாழ்க்கை சொல்லும்
முத்து முத்தான தத்துவங்களை ஒவ்வொரு
சனிக்கிழமையும் கேட்கும் போது
கோபுரங்கள் சாய்வதில்லை என்பதை
எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகி்ன்றீர்கள்.

கண்ணை நம்பாதே என்ற பாடலுக்கு
அவர் நடித்ததை அற்புதமான விளக்கத்தை நீங்கள்
கூறிய போது எனக்கு வியப்பாக இருந்தது
.நான் ஏன் பிறந்தேன், அதோ அந்தப்பறவைபோல
வாழவேண்டும் என்பதற்கும் அப்பாடலை
எழுதிய கவிஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில்
அழகாக எடுத்துரைக்கும் உங்கள் தத்துவம்
பாலைவனத்தில் ஒரு பசும் சோலைபோல் இருக்கின்றது

கலங்கும் தமிழன் கண்ணிரை
துடைக்கப்பிறந்த சரித்திரமே என்று
காவியநாயகனின் படைப்புகளை
சிறப்புடன் சித்தரித்து' மாபெரும் சபை தன்னில்
நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் 'என்று
'நாடு அதை நாடு ' என்று உங்களிடம்
எல்லோரையும் நாட வைக்கின்றீர்கள்.

வசந்த காலங்களை வறுமை விரட்டிய போதும்
இளமைக் காலத்தை விதி வீணாக்கியது
என்று மன விரக்தியோடு நீங்கள் சொல்லும் போது
என் மனமே ஒரு நிமிடம் கலங்கி விட்டது.

அதற்கேற்றது போல் அவனுக்கு என்ன தூங்கி விட்டான்
அகப்பட்டது நான் அல்லவா ,கடவுள் ஏன் கல்லானார்,என்று
நொந்து இப்பாடலைப்போட்டு அசத்திவிட்டீர்கள்.

சோகப்பாடலோ, தத்துவப்பாடல்களோ, காதல்பாடல்களோ
ஒவ்வொரு பாடல்களையும் நான் கேட்கும் போதெல்லாம்
அதன் இசையையும் பாடியோரின்
குரலையும் தான் ரசித்திருக்கின்றேன் .

ஆனால் , ஒவ்வொரு பாடல்களுக்கும்
நீங்கள் சொல்லும் விளக்கங்களை கேட்கும்
போதுதான் அப்பாடல்களின் தனித்துவம்
தெரிகின்றது.அதோடு மட்டுமல்ல M G R
அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல
எத்தனையோபேரின் வாழ்க்கைகள் அந்தப் பாடல்களில்
ஒளிந்து கிடக்கின்றன என்பதை எவ்வளவு வடிவாக
நீங்கள் எடுத்து காட்டுகின்றீர்கள்.
அதற்கு ஏற்றதுபோல் இடையிடையே MGR
குரலை ஒலிக்க விட்டு இதுதான்
இந்த மானிட வாழ்க்கை என்றும்,
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்,
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.
என்றும், பின்பு

கடவுள் செய்த பாவம் அதனால் மனிதன்
காணும் துன்பம் யாவும், இதுவே மனிதன்
கொண்டகோலமென்று எவ்வளவு அழகாக
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் எற்படும்
விரக்த்தியையும் அதில் உள்ள தத்துவங்களையும்
கூறிவிட்டு , என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்று .....

எப்படி உங்ககளால் ஒவ்வொன்றுக்கும்
ஏற்றது போல் பாடல்களை தொகுத்து இப்போது வேதனையால்
வெந்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு
சத்துணவு தருகின்றீர்கள் பாடல்கள் மூலம்.

அதேபோல் ஞாயிற்றுகிழமையில்
சங்கமநெஞ்சங்களை சங்கமிக்கத்தோன்றும்
வகையில் இதய வீணைகளாக்கியும்,

திங்கட் கிழமையில்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தம் என்று இசை மழையில்
நனைத்தும்...

செவ்வாய் தன்னில்
கீதம் பாடும் ஜேசுதாசின்" செவ் வாயி" னாயினால்
அதிசய ராகத்தையும் , வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம் என உங்கள் கவிதையால்
வசந்தத்தை வரவழைத்து
புதன் தன்னில் வேதனைகள் உண்டா ?
மீண்டும் ஒலிக்க விடுங்கள்
ஒரு ஜேசுதாசின் குரலை!

பிள்ளைத்தமிழ் பாடுகின்றேன்
என்ற பாடலைப்போடும் போதும்
உங்கள் விட யாருமே இமயமலையைகூட
தொட்டுவிட முடியாது.`
எந்தப்பெற்றோரும் சரி தவறாகப்போன
பிள்ளைகளும் சரி மனதிற்குகுள்
உச்சரிக்கும் பாடல் இது,

இந்தப்பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப்பூவல் தொட்டிலைக்கட்டி வைதேன்
என்று பாடலைப்ப்போட்டு விட்டு
விரக்த்தியின் ஓரம் சென்ற பின்பு கூட
ஒரு விடியல் தெரியலாம். என்று நீங்கள்
சொல்லும் போது வானொலியை இயக்குவதும்
இறைவன் கொடுத்தவரம் என்று நீங்கள்
சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது.

இலையுதிர் காலத்திலும்
இளவேனில் காலத்தைஅனுபவிக்கலாம்.
எப்படி என்றால் என்றும் நல்ல நல்ல
பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக
தேர்ந்து எடுத்து அழகாக காலங்களுக்கு
ஏற்றவண்ணம் நீங்கள் போடும் போது!!

கேட்கவே உங்கள் குரல் சொர்க்கம்!
செல்லும் இடம் தோறும் புகழ்
சேர்க்கும் உங்கள் நல்லமனம்
என்றும் வாழ்க! வாழ்க!!
தினம் தினம் தொடரட்டும்
உங்கள் சேவை! மலரட்டும்
காற்று மண்டலம் கற்கண்டாக!

வியாழக்கிழமையில் உங்கள் கற்பனயில்
உதிரும் கவிதை மழையில்
இளைய நிலாவை நனைத்து
பாடும் வானம் பாடியாக
பாடுநிலாவே! ராஜராஜசோழன் வாழ்க
என்று அடுக்கடுக்காக தொடுத்து வழங்கும்
சிறப்பு உங்களுக்கே முதல் சிறப்பு,
அதுவே உங்கள் தனிச்சிறப்பு !

வெள்ளிக்கிழமையில் தெய்வீகராகமாக
காலையில் கேட்க்கும் கோவில்மணியுடன்
பூபாள ராகமாக ஏழுநாட்களும்
ஏழிசைக்கீதஙகளாக அமைதி தேடும் உள்ளங்களுக்கு
அருமருந்தாக தரம் வகுத்து தந்திடும் சிறப்பு!

பாடல்களை இயற்றுவோர்,அதற்கு இசையமைப்போர்,
பின் அப்பாடலைப் பாடுவோர், அப்பாடல்களுக்கு
ஏற்ற வண்ணம் நடிப்பவர்கள் , இவர்கள் எல்லோரும்
இவ்வொன்றுக்கும் எவ்வளவு கஸ்ரப்பட்டார்கள்
என்பதை ஒவ்வொரு பாடல்கள் போடும் போதும்
அதற்கு ஏற்றமுறையில் பாடல்களை போட்டு
நீங்கள் சொல்லும் விளக்கங்களை கேட்கும் போது
நான் நினைப்பேன் நீங்கள் பிறந்தது இந்த
வரலாறு படைத்த நாயகர்களின் புகழை
இனி வரும் சந்ததியினருக்கு எடுத்துரைப்பதற்காகவா? என்று!

இசையமைப்போருக்கு! உங்கள்
ஈடினையில்லா ரசனையும்,
பாடல்களைப் பாடுவோருக்கு
காலங்களின் அடிப்படையில் , ராகங்களையும்
தரமாக தரம் பிரித்து
தந்திடும் ஆற்றல் அபாரம்!

இன்னும் என்றும் அந்த நாளை
நினைத்திட தொடரட்டும் உங்கள் சேவை!

"ஏழிசைக்கீதமே எங்களுக்கோர் ஜீவ நாடி நீங்கள"
- கௌரி , டென்மார்க்

LINK

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

Thursday, March 26, 2009

'யாழ் வழங்கும் ஆழ்நிலைத் தியான வகுப்பு...'


Dear sudhakar sir

happy noon. i just want to share a few words you .

ur program is extremely good , 11-12 is the silent time but in that time also i will be fresh , relaxed and in the happiest mood because of your collections , i enjoy each and every song sir.

your way of presenting the kavithai is good epdeena feel panni solluveenga that magnetic voice is superb.

daily you will come out with beautiful collections that it self is fantastic, at the same time we are also requesting you and making us happy thats very difficult from your view ana naanga kettu ATHA NEENGA PLAY panrappa irukira santhosam chanceless sir.

today only i saw your blogs , chanceless you did a lot , why dont you expose much.

we like your professional ethics.

- ANITHA , CHENNAI


இப் புதுவருடம் தன்னில்
இன்பமுடன் நீங்கள் வாழ

என் குலதெய்வம் என் திருமுருகன் அன்னையிடம்
வேண்டி வணங்குகிறேன் கைகூப்பி

உங்கள் வாழ்வினிலே " இல்லை" என்ற சொல்லை
நீங்கள் மறந்திடவே
என் வரம் இது வென்று வேண்டுகின்றேன்
என் திருக்குமரனின் அன்னையிடம்.

காலம் என்னும் சக்கரத்தில்
சுழரும் நம் வாழ்வு
இறைவனுக்கு விளையாட்டு
வெற்றி தோல்வி நம் தலையெழுத்து

எம் தலை எழுத்தின் மகிமையிலே
தங்கமென உங்கள் குரல்
தரணியெங்கும் ஒலித்ததனால் தள்ளாடும் நேரத்திலும்
தவிக்க்கின்றோம் உங்கள் குரல் கேட்பதற்கு.

நாம் எல்லோரும் வாழ உங்கள் குரல் ஒலித்திடவே
நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டுமென
நான் வணங்கும் கந்தனின் அன்னையிடம்
வரிதனையே செலுத்திடுவேன்.

தினம் தினம் உங்கள் கவிக்குரல்
கேட்க ஏங்குகிறேன் என்நாளும்
இப்புதுவருடம் தனில் என்றும் நீங்கள் நலமுடன்
வாழ என் நாளும் வாழ்த்துகிறேன்!

"என் மனமகிழ்ந்து"
வாழ்க! வாழ்க!!

கௌரி , டென்மார்க்
14-04-2009


My dear Suthakar,

Trust that you are keeping well .

I was in Chennai in august last year for two days and called you and I couldn,t get
through. I miss listening to you now ,because I am unable to get sun 93.5 fm over the
internet,but I listen to the mp3s you gave.

It was a pleasure for me to have met a great person like you with a lot of talents
a masterful way of speaking THAMIL with an excellent voice modulation.

I think I told you that I did announceing at the idustrial exhibition in 1965 with
K.S.Rajah.

I read about the death of Senthilmany Mylvaganm on your site.I knew
her when I was Radio Ceylon artist.

A photo of me as bikku, with Supuluxmi Kasinathan is in the web site of K.S.Balachandran(RADIO).

I will try to call you. It is difficult to catch.

May God Bless YOU with all the very Best,
With love,
Mahendran
U.S.A

Respected Sir,

Iam working as a computer teacher. Iam a big fan of you.

Like you I also very fond of listening to songs in my earlier age and school days.I am 37 now.

Talking in Tamil without mixing other language has becoming rare now. But you are doing that.

The old songs which you are selecting and broadcasting is really superb and it remainds my school days.

You are a greedom to Suryan Fm. Because of you i am listening to Suryan Fm. Convey this message to them.
regards.
Mallikeswari.
* So far i am not a fan of any person.





'யாழ் வழங்கும் பாடல் தொகுப்பு...அதுவும்
ஒரு வகை ஆழ்நிலைத் தியான வகுப்பு...'

- லால்குடி திருமுருகன்

Anpu Suthakar Anna,

well & wish you & your family the same.

Here with I'm attaching five snaps which we took with you at Nathella jewellery.

It was so memorable day that we were able to meet you at nathella.It was a golden day in my life like you said you met our one & only ever green K.S.Raja at jaffna railway station.

Anna I feel & attract by your announcement & the collection of the songs really like k.s.rajah so, I enjoy your voice & collection daily.

endrum anpudan,

anpu thampy,

P.Sevverl (Mattu Nagar)


Dear Anna,

well & wish you the same.Thanks lot for playing the songs which I request you regularly.After our ever memorable Mr.K.S.Raja we got you as a very charming & knowledgable thamil announcer.Its our luck.I have to thank God for it.

Ungla kural thelivana venkala venkala kural.So,I pray God to give you all in your life & so we can have you life long on radio.

with kind regards
your brother,
P.Sevverl

புகைப் படங்களில் நேயர்கள் மட்டுநகர் செவ்வேள்,
லால்குடி முருகன் ஆகியோருடன் யாழ் சுதாகர்.

பாடல்களை காதலியாக்கி,காதலியை கவிதையாக்கி,
கவிதைகளால் கலைஞர்களுக்கு
புகழ்மாலை அணிவித்து!
அந்த நாள்களை யாழ் எடுத்து அழகாக மீட்டி
இன்பம் கொடுக்கும் " யாழ் சுதாகர்" அவர்களே!
31-01-2009 அன்று நகைச்சுவை மன்னர் அமரர் நாகேஷ் அவர்களின் மங்காத நினைவுகளை...அவ்ர் நடித்த படங்களில் இருந்து நகைச்சுவை கொண்ட கருத்து மிக்க பாடல்களை தொகுத்து வழங்க..ி அவரின் பூதவுடல் மறையுமுன்னரே உங்களின் இனிய குரலால அவரின் பெருமைளைக் கூறியது, அவரின் காதுகளில் இனிமையாக ஒலித்திருக்கும்.
அமரர் நாகேஷ் படங்களில் நடிக்கும் போது அவருக்கு எத்தனை வயது என்று கூறமுடியாது.

ஏனென்றால்
எப்போதும் எல்லோரையும் மகிழ்வித்த குறும்பான கதைகளும்
துள்ளலோடு கூடிய நடிப்பும் ,எந்த நடிகராலும் முடியாத ஒன்று. அதேபோல் அன்று நீங்கள அவருடைய பாடல்களை தொகுத்து வழங்கியபோது துள்ளி ஓடி வந்து உங்கள் அருகில் அமர்ந்திருந்து உங்களை மனதார வாழ்த்தியிருப்பார். உங்கள் குரலை கேட்டு அவரின் ஆத்மா உங்களை ஆசீர்வதித்திருக்கும்.

உங்கள் தொகுப்புகள் மிகவும் ஆழமான மனதை விட்டகலாத அற்புதமான படைப்புகள்.

உலகத்தில் சிறந்த நகைசுவையான நடிகரும், இப்போது உருவம் இல்லாதவருமான நகைச்சுவை மன்னரை நினைவுகூர்ந்த், வாழ்த்தி
பெருமைகள் கூறிய " யாழ் சுதாகருக்கு" என் அன்பான வாழ்த்துகள்.

-கலா செல்லத்துரை,சுவீடன்.


Saturday, January 17, 2009

தெளிவையும் ஞானத்தையும் தரும் ...யாழ் சுதாகரின் பாடல் தெரிவு . சரோஜா சம்பத்குமார்

'லால்குடி முருகன்' கடிதத்தைப் பெரிய எழுத்தில்
தெளிவாகப் படிக்க...
அதன் மேலே ஒரு தடவை அழுத்துங்கள்.




கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.





LINKS

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்

யாழ் சுதாகரின் குரல் பதிவுகளைக் கேட்க...

உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்! -மயிலாடுதுறை ஸ்ரீநிவாஸ்

கே.எஸ்.ராஜாவுக்கு 'பயணம்...பயணம்'... பாடல்....நான் ஆடிப் போய் விட்டேன் அய்யா! -வேலு ரவிச்சந்திரன்

பழைய பாடல்களை... இன்றைய இளைஞர்களையும் விரும்ப வைத்த 'யாழ் சுதாகர்'. -கொளத்தூர் தண்டபாணி

நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

உங்கள் குரல், ரசிகர்களுக்கு தவம்! மற்றவர்களுக்கு வேதம்!

Who is this silver tonged orator?

Your comments and voice are refreshing to hear. They add lustre to the song.

May god bless you for the joy you are brining in for so many listeners.

Highly nostalgic pleasure for Tamilians in their 40s age, like me.

you are an amazing person and added to all this your kind Majestic voice and the way you speak makes the progs so much better.

அந்த நாளில் நடராசா செய்த 'பானையில் ரேடியோ' கதை
சுவாரஸ்யம்-சரோஜா சம்பத்குமார்


4 மணிநேரம் சூரியன் பண்பலையில்..இசை வெள்ளமா?

இன்று 17/ 01/ 09...
சூரியனை தட்டியபோது.......
கவிஞரின் குரலொன்று......
காலங்களை பின்னோக்கி....

கான மழையாக!
அமுத மழையாக!
பூ மழையாக!
பொழிந்தது யாழ் சுதாகரின்
இசை என்னும் வெள்ள்ம்!

வந்தது இசை வெள்ளமா?
பாடசாலையில் பாடங்களா?
ஆசிரியரின் அறிவுரைகளா?
பள்ள ிபருவத்தின் பல் சுவைகளா?
மறைந்துவிட்ட சினிமா திரை அரங்குகளா?
மங்கி விட்ட இளமையின் ராகங்களா?

4 மணிநேரம் சூரியன் பண்பலையில்
யாழ் சுதாகரின் வண்ண வண்ணமாக
வீசிய ஒலியில்
மறந்து விட்டது
துன்பங்களும், துயரங்களும்

சூரியன் என்னும் பண்பலையில்
சுடராக ஒளிரட்டும்
யாழ் சுதாகர் அந்த நாட்களோடு!!!


மலரட்டும மல்லிகை பூக்களாக
அந்த நாள் நினைவுகள்..........

- தேவிகா
ITALY

Dear Yazh,

4 mani nera thookathai keduthu...

Inniyapadalkalai poomaalaiyai thodutthu....

Malarum ninaivugalai issaiyai vaditthuk
Kodutthaa yazhpanam sudhaher avargale...

Nangal solkirom kodi nantrigale..

Thodarattum ungalathu isssi payanam


Thirumurugan / jai
velachery
vijayanagar


Monday, January 12, 2009

"தமிழுக்கு இனிமை தாருங்கள் தினம் தினம்."

'அந்த நாளும் வந்திடாதோ...' என்று அந்த நாளை மறந்திடாமல்
அற்புதங்கள் சொல்லும் அழகான அமுத குரலும்,

தத்துவம் சொல்லும் அனுபவம் நிறைந்த குரலும்,

சோக கதைசொல்லும் போது மனது தளர்ந்த குரலும்,

பக்திப்பாடல்களுக்கு பரவசமூட்டும் பண் இசைகுரலும்,

காதலின் இனிமையை கனிந்த, கனிவான குரலிலும

இளமயை ததும்பவைக்கும் இனிப்பு மின்சாரமாக,

உங்களைப் படைத்த பிரம்ம தேவன் எங்கே? எங்கே?

M. G R தனித்துவத்தை தரமாக்கி,
சிவாசி யின் சித்திரத்தை சிகரமாக்கி,
கவிக் கண்ணனின் கற்பனைகளை கலைக்கோவிலாக்கி,
T.M. S இன் கானக்குரலை பாட்டுக்கொரு தலைவனாக்கி,
K. S.RAJA வை இலங்கை வானொலிக்கு ஒரு ராசாவாக்கி,
கலை களுக்கு ஒர் கவி னாக,
மணிமகுட புகழ் மாலை சூட்டும் உங்களிடம்!

பூவின் மென்மை உங்கள் குரலில்.....

மலரின் வாசனை உங்கள் சொல்லில்....
.
மதுரத் தமிழ் உங்களிள் இலகணத்தில்......

உதிரட்டும் கவிதை கொண்ட பழைய பாடல்கள்
வீசட்டும் முத்துக்களாக!!!

துயரங்களால் புண்பட்ட தமிழ் உள்ளங்கள் மறந்துவிட்ட இனிய நினைவுகள்,தியேட்டர்கள்,விடுபட்ட கோவில் திருவிழாக்கள்,புகழ்பெற்ற இலங்கை வானொலியின் இனிய நிகழ்ச்சிகள் எல்லாம் என்றோ மறந்துவிட்டது என நினைக்கு முன்னர் மீண்டும் நினைவுகளுக்கு அழைத்துச்சென்று
ரசிக்கவைக்கும் "யாழ் சுதாகர்" அவர்களே!

பாடல் தொகுப்புகளுக்கு முத்தான கவிதை என்னும் மலர்களை, ஒவ்வொரு வீடுகளிலும்,ஒவ்வொரு உள்ளங்களிலும் யாழ் இசைக்கு ஈடான உங்கள் அழகான குரலால், உதிர்ந்துபோன அந்த நாட்களை மீண்டும் மலரவைத்து எங்களை கற்பனையில் மிதக்க வைக்கின்றீர்கள்.

சென்ற 24/ 12/ 08 அன்று நீங்கள் நடத்திய 4மணிநேர நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்தபோது என்னையே மறந்து விட்டேன்.

நானும்உங்களைப்போல் இல்ஙகை வானொலியை மிகவும் ரசித்துக்கேட்பேன். நீங்கள் சொல்லும் பழைய சம்பவங்கள், படங்களின் கட் அவுட் கதைகள்
பாடசாலையில் படித்த நினைவுகள் சங்கிலித்தொடரக அலைமோதும்.!

ஒவ்வொரு பாடல்களுக்கும் நீங்கள் சொல்லும் விமர்சனங்களும் சரி, கவிதைகளும் சரி, அது சோகப்பாடல்களனாலும், ததுவப்பாடல்களானாலும், காதல் அல்லது பக்திப்பாடல் எதுவாக இருங்தாலும் சரி பாடல்களுக்கு ஏற்றவாறு குரலை மாற்றி உங்களால் எப்படிப்பேச முடிகிறது என்று நான் பல தடவை சிந்தித்திருக்கிறேன்.

29/ 12/ 08 அன்று ராகங்களை அடிப்படையாக கொண்ட பாடல்கள் மிக மிக நன்றாக இருந்ததது. கேட்க முடியாத, கேட்ககிடைக்காத அதிசய
ராகங்களைக்கேட்டபோது மிகவும் சந்தோசமாக இருந்தது.

இலங்கை வானொலியில் பாடல்களை கேட்டபோது சும்மாதான் பாடல்களை ரசித்தேன். நீங்கள் இப்போது பாடல்களுக்கு தரும்விளக்கங்களும், கவிதைகளும் தனிப்பெருமை சேர்க்கின்றது. பாடல்களின் தனித்துவத்தை இப்போதுதான் விளங்கிக்கொள்கிறேன்.

உங்கள் நிகழ்ச்சிகளை E T R வானொலியிலும், I T R வானொலியிலும் கேட்டிருக்கிறேன். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத
தொகுப்பு தோரணங்கள்.

நீங்கள் ஒவொரு படல்கள் போடும்போது சொல்லும் ஒவ்வொரு பழைய கதைளைக்கேட்கும் போது எனக்கும் பழைய நினைவுகள்
எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

உங்களால் முடிந்தால் எப்படியும் கிழமையில் 2 நாட்கள் 3 மணிநேரம் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யுங்கள்.
உங்கள் நிகழ்ச்சிகளை கேட்கும்போது கவலைகள் எல்லாம் மறந்துபோய் விடுகின்றது.

கன மழை 5 நிமிடங்கள் தொடர்ந்து பெய்தால் பெருவெள்ளம் வருவது போல் நீங்கள் 1மணிநேரம் நிகழ்ச்சி நடத்தும்போதுகூடஅந்த 1மணிநேரமும் எங்கேயோ திருவிழாவில் இருப்பது போன்று இருக்கும். அப்படி ஒரு இசை வெள்ளத்தை
தந்துவிடுவீர்கள்.

செல்லும் இடம் தோறும் "புகழ் சேர்க்கும் சுதாகருக்கு" என்றும் என்
அன்பான வாழ்த்துகள்.

" தமிழுக்கு இனிமை தாருங்கள் தினம்! தினம்!!"


செ.கருணாகரன், [மண்டை தீவு]

HOLLAND

Saturday, October 25, 2008

அந்த நாளில் நடராசா செய்த 'பானையில் ரேடியோ' கதை சுவாரஸ்யம்-சரோஜா சம்பத்குமார்



'...தம்பி ராசு கோதுமை தோசை சுட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினீர்கள்.
அம்மாவின் உடல் நிலை சரியில்லாத போது ஆண் பிள்ளைகள் உதவுவது...
எவ்வளவு பெரிய உதவி என்பதை உணர்ந்தேன்....' - சரோஜா சம்பத்குமார்

தொடர்ச்சியைப் படிக்க கீழேயுள்ள கடிதத்தின் மேல் மவுசினால் அழுத்துங்கள்.

13-9-2008 அன்று சென்னை ரஷியன் கலாச்சார மையத்தில் DR.P.B.SRINIVAS அவர்களுக்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ் நாள் சாதனையாளர்' விருது [LIFETIME ACHIEVEMENT AWARD]வழங்கப்பட்ட போது எடுத்த படம். வலது பக்கத்தில் யாழ் சுதாகர்.




நேயர் தேவிகா எழுதிய கடிதம் கீழே...


தமிழுக்கு அமுதென்று பெயர்- அந்த !
தமிழுக்கு இலக்கணம் யாழ்.
யாழுக்கு இலக்கணம் சுதாகர்!

சுவை கொண்ட தமிழை,
கவிதைப் பூக்களாக்கி!
பழைய பாடல்களுக்கு வாசம் கொடுத்து!
ரசிக உள்ளங்களையெல்லாம் உலகெங்கும்
ஆட்கொண்டிருக்கும் உங்களை...

நேரங்கள் வரவேற்க!
காலங்கள் வாழ்த்த!

காவியத்தின் நாயகனாக
வரலாறு கூறட்டும்..
தினம்!!!........தினம்..!!! - தேவிகா

LINKS

யாழ் சுதாகரின் குரல் பதிவுகளைக் கேட்க...

உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்! -மயிலாடுதுறை ஸ்ரீநிவாஸ்

கே.எஸ்.ராஜாவுக்கு 'பயணம்...பயணம்'... பாடல்....நான் ஆடிப் போய் விட்டேன் அய்யா! -வேலு ரவிச்சந்திரன்

பழைய பாடல்களை... இன்றைய இளைஞர்களையும் விரும்ப வைத்த 'யாழ் சுதாகர்'. -கொளத்தூர் தண்டபாணி

நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

உங்கள் குரல், ரசிகர்களுக்கு தவம்! மற்றவர்களுக்கு வேதம்!

Who is this silver tonged orator?

Your comments and voice are refreshing to hear. They add lustre to the song.

May god bless you for the joy you are brining in for so many listeners.

Highly nostalgic pleasure for Tamilians in their 40s age, like me.

you are an amazing person and added to all this your kind Majestic voice and the way you speak makes the progs so much better.

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்


'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Saturday, October 18, 2008

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்

ஒரு எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு குரலால் புகழ் சேர்ப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் டி.எம்.எஸ்.
அந்த டி.எம்.எஸ்ஸுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் தான் இந்த யாழ் சுதாகர் ...'என்று சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எம்.எஸ் சொன்னதை நேரில் கேட்டு விட்டு, ஓடி வந்து ...உணர்ச்சிப் பிரவாகத்துடன்
நண்பர் கணேஷ் எழுதிய கடிதம்.

எனது காவலையும் மீறி எப்படியோ தவறிப் போன கடிதம். மீண்டும் கிடைத்த போது மிக நெகிழ்ந்து போனேன்.

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.