Sunday, April 26, 2009

ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .. - கௌரி , டென்மார்க்

ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .....
மறக்க முடியாத அந்த நாட்களை மீண்டும்
E T R வானொலி மூலம் தமிழ் சுடராக உங்கள் குரல்
ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரம்
உங்கள் தித்திக்கும் உங்கள் செந் தமிழை
திகட்டாமல் கேட்கின்றேன்.

காவியத்தலைவன் , பொன்மனச்செம்மல்
செந்தமிழ்ச்செல்வனின் வாழ்க்கை சொல்லும்
முத்து முத்தான தத்துவங்களை ஒவ்வொரு
சனிக்கிழமையும் கேட்கும் போது
கோபுரங்கள் சாய்வதில்லை என்பதை
எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகி்ன்றீர்கள்.

கண்ணை நம்பாதே என்ற பாடலுக்கு
அவர் நடித்ததை அற்புதமான விளக்கத்தை நீங்கள்
கூறிய போது எனக்கு வியப்பாக இருந்தது
.நான் ஏன் பிறந்தேன், அதோ அந்தப்பறவைபோல
வாழவேண்டும் என்பதற்கும் அப்பாடலை
எழுதிய கவிஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில்
அழகாக எடுத்துரைக்கும் உங்கள் தத்துவம்
பாலைவனத்தில் ஒரு பசும் சோலைபோல் இருக்கின்றது

கலங்கும் தமிழன் கண்ணிரை
துடைக்கப்பிறந்த சரித்திரமே என்று
காவியநாயகனின் படைப்புகளை
சிறப்புடன் சித்தரித்து' மாபெரும் சபை தன்னில்
நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் 'என்று
'நாடு அதை நாடு ' என்று உங்களிடம்
எல்லோரையும் நாட வைக்கின்றீர்கள்.

வசந்த காலங்களை வறுமை விரட்டிய போதும்
இளமைக் காலத்தை விதி வீணாக்கியது
என்று மன விரக்தியோடு நீங்கள் சொல்லும் போது
என் மனமே ஒரு நிமிடம் கலங்கி விட்டது.

அதற்கேற்றது போல் அவனுக்கு என்ன தூங்கி விட்டான்
அகப்பட்டது நான் அல்லவா ,கடவுள் ஏன் கல்லானார்,என்று
நொந்து இப்பாடலைப்போட்டு அசத்திவிட்டீர்கள்.

சோகப்பாடலோ, தத்துவப்பாடல்களோ, காதல்பாடல்களோ
ஒவ்வொரு பாடல்களையும் நான் கேட்கும் போதெல்லாம்
அதன் இசையையும் பாடியோரின்
குரலையும் தான் ரசித்திருக்கின்றேன் .

ஆனால் , ஒவ்வொரு பாடல்களுக்கும்
நீங்கள் சொல்லும் விளக்கங்களை கேட்கும்
போதுதான் அப்பாடல்களின் தனித்துவம்
தெரிகின்றது.அதோடு மட்டுமல்ல M G R
அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல
எத்தனையோபேரின் வாழ்க்கைகள் அந்தப் பாடல்களில்
ஒளிந்து கிடக்கின்றன என்பதை எவ்வளவு வடிவாக
நீங்கள் எடுத்து காட்டுகின்றீர்கள்.
அதற்கு ஏற்றதுபோல் இடையிடையே MGR
குரலை ஒலிக்க விட்டு இதுதான்
இந்த மானிட வாழ்க்கை என்றும்,
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்,
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.
என்றும், பின்பு

கடவுள் செய்த பாவம் அதனால் மனிதன்
காணும் துன்பம் யாவும், இதுவே மனிதன்
கொண்டகோலமென்று எவ்வளவு அழகாக
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் எற்படும்
விரக்த்தியையும் அதில் உள்ள தத்துவங்களையும்
கூறிவிட்டு , என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்று .....

எப்படி உங்ககளால் ஒவ்வொன்றுக்கும்
ஏற்றது போல் பாடல்களை தொகுத்து இப்போது வேதனையால்
வெந்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு
சத்துணவு தருகின்றீர்கள் பாடல்கள் மூலம்.

அதேபோல் ஞாயிற்றுகிழமையில்
சங்கமநெஞ்சங்களை சங்கமிக்கத்தோன்றும்
வகையில் இதய வீணைகளாக்கியும்,

திங்கட் கிழமையில்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தம் என்று இசை மழையில்
நனைத்தும்...

செவ்வாய் தன்னில்
கீதம் பாடும் ஜேசுதாசின்" செவ் வாயி" னாயினால்
அதிசய ராகத்தையும் , வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம் என உங்கள் கவிதையால்
வசந்தத்தை வரவழைத்து
புதன் தன்னில் வேதனைகள் உண்டா ?
மீண்டும் ஒலிக்க விடுங்கள்
ஒரு ஜேசுதாசின் குரலை!

பிள்ளைத்தமிழ் பாடுகின்றேன்
என்ற பாடலைப்போடும் போதும்
உங்கள் விட யாருமே இமயமலையைகூட
தொட்டுவிட முடியாது.`
எந்தப்பெற்றோரும் சரி தவறாகப்போன
பிள்ளைகளும் சரி மனதிற்குகுள்
உச்சரிக்கும் பாடல் இது,

இந்தப்பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப்பூவல் தொட்டிலைக்கட்டி வைதேன்
என்று பாடலைப்ப்போட்டு விட்டு
விரக்த்தியின் ஓரம் சென்ற பின்பு கூட
ஒரு விடியல் தெரியலாம். என்று நீங்கள்
சொல்லும் போது வானொலியை இயக்குவதும்
இறைவன் கொடுத்தவரம் என்று நீங்கள்
சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது.

இலையுதிர் காலத்திலும்
இளவேனில் காலத்தைஅனுபவிக்கலாம்.
எப்படி என்றால் என்றும் நல்ல நல்ல
பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக
தேர்ந்து எடுத்து அழகாக காலங்களுக்கு
ஏற்றவண்ணம் நீங்கள் போடும் போது!!

கேட்கவே உங்கள் குரல் சொர்க்கம்!
செல்லும் இடம் தோறும் புகழ்
சேர்க்கும் உங்கள் நல்லமனம்
என்றும் வாழ்க! வாழ்க!!
தினம் தினம் தொடரட்டும்
உங்கள் சேவை! மலரட்டும்
காற்று மண்டலம் கற்கண்டாக!

வியாழக்கிழமையில் உங்கள் கற்பனயில்
உதிரும் கவிதை மழையில்
இளைய நிலாவை நனைத்து
பாடும் வானம் பாடியாக
பாடுநிலாவே! ராஜராஜசோழன் வாழ்க
என்று அடுக்கடுக்காக தொடுத்து வழங்கும்
சிறப்பு உங்களுக்கே முதல் சிறப்பு,
அதுவே உங்கள் தனிச்சிறப்பு !

வெள்ளிக்கிழமையில் தெய்வீகராகமாக
காலையில் கேட்க்கும் கோவில்மணியுடன்
பூபாள ராகமாக ஏழுநாட்களும்
ஏழிசைக்கீதஙகளாக அமைதி தேடும் உள்ளங்களுக்கு
அருமருந்தாக தரம் வகுத்து தந்திடும் சிறப்பு!

பாடல்களை இயற்றுவோர்,அதற்கு இசையமைப்போர்,
பின் அப்பாடலைப் பாடுவோர், அப்பாடல்களுக்கு
ஏற்ற வண்ணம் நடிப்பவர்கள் , இவர்கள் எல்லோரும்
இவ்வொன்றுக்கும் எவ்வளவு கஸ்ரப்பட்டார்கள்
என்பதை ஒவ்வொரு பாடல்கள் போடும் போதும்
அதற்கு ஏற்றமுறையில் பாடல்களை போட்டு
நீங்கள் சொல்லும் விளக்கங்களை கேட்கும் போது
நான் நினைப்பேன் நீங்கள் பிறந்தது இந்த
வரலாறு படைத்த நாயகர்களின் புகழை
இனி வரும் சந்ததியினருக்கு எடுத்துரைப்பதற்காகவா? என்று!

இசையமைப்போருக்கு! உங்கள்
ஈடினையில்லா ரசனையும்,
பாடல்களைப் பாடுவோருக்கு
காலங்களின் அடிப்படையில் , ராகங்களையும்
தரமாக தரம் பிரித்து
தந்திடும் ஆற்றல் அபாரம்!

இன்னும் என்றும் அந்த நாளை
நினைத்திட தொடரட்டும் உங்கள் சேவை!

"ஏழிசைக்கீதமே எங்களுக்கோர் ஜீவ நாடி நீங்கள"
- கௌரி , டென்மார்க்

LINK

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

No comments: