
உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்!
மதிப்பிற்கும் போற்றுதலுக்குமுரிய திரு. யாழ் சுதாகர் அவர்களுக்கு
அன்போடும், ஆசையோடும் மயிலாடுதுறை ஸ்ரீநிவாஸ் எழுதும் மடல்.
தாங்கள் வழங்கிய வரும் நிகழ்ச்சியினைக் கேட்பதற்கு
சுடலலைகள் கரைநோக்கி ஆவலுடன் ஓடிவந்து குதித்து ஆர்ப்பரிப்பது போல... ..
எப்பணியில் எங்கிருந்தாலும் ஓடி வர வைத்திருக்கிறீர்களே!
இந்த ஈர்ப்பு சக்தியை – கவி ஈர்ப்பு சக்தியை,
புவி ஈர்ப்பு சக்தியிடம் கற்றுக் கொண்டீர்களா?
ரசிகர்களின் துக்கம், களைப்பு, மனச்சோர்வு இவற்றை ஒன்று சேர களைந்தெடுத்து .....
உற்சாக மின்சாரத்தை உங்கள் கவிதை மற்றும் வைரப் பெட்டகங்களில் இருந்து
தேர்ந்தெடுக்கும் கானங்களைக் கொண்டு மாலை தொடுத்து அணிவிக்கிறீர்களே!
இந்த சுயநலமில்லா பிறவிக் குணம் கொண்ட உங்களை
எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.
சத்துள்ள சங்கீதத்தையும், வார்த்தைகளையும் கொண்ட பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம்
ஏராளமான இதயங்களில்
விலை கொடுத்து வாங்க முடியாத அமைதியை தவழவிடும் புண்ணிய காரியத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
“செவிக்கு உணவில்லாத போது சிறிதளவு வயிற்றுக்கு ஈயப்படும்” என்ற வள்ளுவரின் வார்த்தைக்கு ஏற்ப சத்துள்ள…..
ஆத்மாவை அதிர வைக்காமல் அமைதிப்படுத்தும் பாடல்களை
செவிக்கு உணவாக வழங்கிவரும் உங்களை….
தன் பேரனை வானில் இருந்து வள்ளுவனும் வாழ்த்தட்டும்.
தங்களின் தமிழ் கேட்கும் பொழுதெல்லாம்
சந்தனக்காட்டில் நின்று தென்றலை நுகரும் சுகம் உணர்கிறோம்.
தமிழைத் தெய்வமெனப் போற்றியவர்கள் அனைவரையும்
தமிழன்னை வான்புகழடைய வைத்திருக்கிறாளே தவிர…
தாழ்வடைய வைத்ததில்லை.
மறந்துவிட்ட இளமைக் காலங்களை
எல்லா நேயர்களுக்கும் ஞாபகப்படுத்தி....
இந்த நகர நரக வாழ்க்கையில் உழன்று...
முதுமையை அது வரவேண்டிய காலத்திற்கு முன்பே
வரவேற்று உபசரித்துக் கொண்டிருப்பவர்களை
தங்களின் நிகழ்ச்சித் தொகுப்பின் மூலமாக
சற்றே இளமைக்கால நினைவுகளை அசைபோட வைத்து
முதுமை அடைவதை ஒத்திப் போடுகிறீர்கள்.
சுருங்கச் சொன்னால் உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்!
தொடுப்புகள்...
1. யாழ் சுதாகரின் புகைப்படத் தோரணங்கள்...
2. யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[ முதல் பகுதி ]
3.யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[ பாகம் - 2]
4. யாழ் சுதாகரின் தத்துவக் கவிதைகள்...
5.' யாழ் சுதாகர் 'எழுதும் 'பாகவதர் முதல் பால சுப்பிரமணியம் வரை...'
6.யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க...